புதுடெல்லி: இந்தியா, அதன் காற்றாலையில் 91.2 மீட்டர் நீளமுடைய இறகுகள் கொண்ட காற்றாடிகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.
அதானி நியூ இன்டஸ்டிரிஸ் லிமிடட் நிறுவனம், குஜராத்தில் உள்ள முந்த்ரா காற்றாலையின் எரிசக்தி உற்பத்தியைப் பெருக்க முயல்வதை அடுத்து நீளமான காற்றாடி இறகுகள் உருவாக்கப்படுகின்றன.
எரிசக்தி உற்பத்தியை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட புதிய காற்றாடிகளில் அந்த இறகுகள் பொருத்தப்படும். அவை குறைவான, மிதமான காற்று வீசும் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலைகளில் பயன்படுத்தப்படும்.
அதானியின் முந்த்ரா ஆலை தற்போது 78.6 மீட்டர் நீளத்திலும் 80.5 மீட்டர் நீளத்திலும் உள்ள காற்றாடிகளைத் தயாரிக்கின்றன.
பெரிய காற்றாடி இறகுகளால் பெரிய பரப்பளவில் உள்ள காற்றை எரிசக்தியாக மாற்ற முடியும். 91.2 மீட்டர் காற்றாடி இறகால் ஏறக்குறைய 26,600 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ள காற்றை இயற்கை எரிசக்தியாக மாற்ற முடியும்.
பெரிய காற்றாடி இறகுகள் மூலம் 5 மெகாவாட்டிற்கும் அதிகமான எரிசக்தியை உற்பத்தி செய்ய முடியும்.
ஒவ்வொரு காற்றாடி இறகும் ஒரு காற்பந்தாட்டத் திடலின் பரப்பளவையும் 30 மாடிக் கட்டடத்தின் உயரத்தையும் கொண்டுள்ளது. ஒவ்வொரு முறை அது சுழலும்போதும் மூன்று காற்பந்தாட்டத் திடலின் பரப்பளவில் உள்ள காற்றை எரிசக்தியாக மாற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
முந்த்ராவில் உள்ள அதானி இறகு உற்பத்தி ஆலை ஆண்டுதோறும் தற்போது 2.25 மெகாவாட் எரிசக்தியை உற்பத்தி செய்யும் ஆற்றலைக் கொண்டுள்ளது. அதாவது ஆண்டுதோறும் 450 இறகுகளை அது தயாரிக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
அந்த எரிசக்தி உச்சவரம்பைப் படிப்படியாக 5 கிகாவாட்டிற்கு உயர்த்த அதானி குழுமம் திட்டமிடுகிறது. காலப்போக்கில் அதை 10 கிகாவாட்டிற்கு அதிகரிக்கவும் திட்டமுள்ளது.
முந்த்ரா ஆலை பலவிதமான தொழில்நுட்பத்தைக் கொண்டு இயற்கை எரிசக்தியை உற்பத்தி செய்யும் நடுவமாக மாற முற்படுகிறது. அதை முன்னிட்டு காற்றாலை உற்பத்தியில் அதானி குழுமம் ஏறக்குறைய 3,000 கோடி ரூபாயைச் செலவிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

