தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வடமாநிலங்களில் அசைவ உணவுக்கு தற்காலிகத் தடை

1 mins read
eb1e17ec-8f78-4efb-8130-debae9e40643
குஜராத்தில் நவராத்திரி விழா கோலகலம் தொடங்கிவிட்டது. - படம்: இணையம்

போபால்: நவராத்திரி விழாவையொட்டி அக்டோபர் 2ம் தேதிவரை மத்திய பிரதேசத்தின் போபாலில் முட்டை, இறைச்சி, மீன் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் உத்தரப்பிரதேசத்தின் ஹபூரில் அக்டோபர் 2ம் தேதிவரை அசைவ ஓட்டல்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக காவல்துறை பிறப்பித்துள்ள உத்தரவில், ‛அக்டோபர் 2ம் தேதிவரை நவராத்திரி கொண்டாடப்பட உள்ளது. இதனால் அசைவ ஹோட்டல், ரெஸ்டாரண்டுகளை மூட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதுதவிர ஆர்எஸ்எஸ் அமைப்பின் கிளைப் பிரிவாகச் செயல்பட்டு வரும் இந்து அமைப்பான விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஹரியானா மாநிலம் குர்கிராம் ஆணையரிடம் அனைத்து இறைச்சி, மீன் கடைகளையும் நவராத்திரி முடியும் வரை மூட உத்தரவிட வேண்டும் என்று மனு அளிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்