அமராவதி: பிஎஸ்எல்வி சி – 59 உந்துகணையை விண்ணில் ஏவும் நடவடிக்கை கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது.
இந்து உந்துகணை புதன்கிழமை மாலை சுமார் 4 மணி அளவில் விண்ணில் வெற்றிகரமாக பாயும் என எதிர்பார்க்கப்பட்டது.
இம்முறை மூன்று செயற்கை கோள்களை பிஎஸ்எல்வி சுமந்து செல்லும் என அறவிக்கப்பட்டு இருந்தது. எரிபொருள் நிரப்பப்பட்டு அனைத்து இறுதிக்கட்ட பணிகளும் முடிவடைந்த நிலையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக உந்துகணை விண்ணில் ஏவப்படும் நடவடிக்கை டிசம்பர் 5ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக இந்திய விண்வெளி ஆய்வுக் கழகமான ‘இஸ்ரோ’ அறிவித்தது.
திட்டமிட்டபடி டிசம்பர் 5ஆம் தேதி, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி – 59 உந்துகணை விண்ணில் ஏவப்பட உள்ளது.

