தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மூன்று மணிநேரம் முன்னதாக விமான நிலையத்திற்கு வருமாறு பயணிகளுக்கு அறிவுறுத்து

1 mins read
a78330c4-b209-491c-878b-b94506264fc8
பாதுகாப்புச் சோதனைகள் அதிகரித்துள்ளதால், விமான நிலையங்களில் பார்வையாளர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. - படம்: ஊடகம்

புதுடெல்லி: இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவிவருவதைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக விமானப் பயணிகள் 3 மணி நேரத்திற்கு முன்னதாக விமான நிலையத்திற்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக விமானப் போக்குவரத்து அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், விமான நிலையங்களில் பயணிகள் தீவிர சோதனைகளுக்குப் பிறகே அனுமதிக்கப்பட இருப்பதால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். 

மேலும், பாதுகாப்புச் சோதனைகள் அதிகரித்துள்ளதால், விமான நிலையங்களில் பார்வையாளர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ஜம்மு உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல முன்பதிவு செய்திருந்தோர், தங்கள் விமானப் பயணச்சீட்டுக்களை கட்டணமின்றி ரத்து செய்யலாம் என்று ஏர் இந்தியா உள்ளிட்ட விமானச் சேவை வழங்கும் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

எல்லையில் பதற்றம் நிலவுவதையடுத்து, பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக எல்லையோரமாக உள்ள ஸ்ரீநகர், சண்டிகர், அமிர்தசரஸ், ஹல்வாரா, பாட்டியாலா, சிம்லா, கங்ரா, பத்திண்டா, ஜெய்சல்மெர், ஜோத்பூர் உள்ளிட்ட 24 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்