ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமிர் கான் முட்டாக்கி இந்தியாவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்யும் தலிபான்கள் இந்தியாவுடனான நட்பை வலுப்படுத்த முயற்சி செய்து வருகின்றனர்.
திரு அமிரின் ஆறு நாள் அதிகாரத்துவப் பயணம் வியாழக்கிழமை (அக்டோபர் 9) தொடங்கியது. இந்தியாவுடன் பொருளியல் தொடர்பாக பேசவிருப்பதாகக் கூறப்படுகிறது.
2021ஆம் ஆண்டில் தலிபான் ஆட்சி அமைத்தபிறகு தற்போதுதான் முதல்முறையாக அதன் அமைச்சர்கள் இந்தியா வருகின்றனர்.
திரு அமிர் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரையும் சந்தித்துப் பேசவுள்ளார்.
“ஆப்கானிஸ்தானுடன் இருதரப்பு உறவு, வட்டாரப் பிரச்சினைகள் உள்ளிட்டவை தொடர்பாகப் பேச இந்தியா ஆவலுடன் உள்ளது,” என்று
இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார்.
இந்நிலையில், திரு அமிர் இந்தியத் தொழில்துறையினர்களுடன் பேசவுள்ளதாகக் கூறப்பட்டது. மேலும் அவர் காதல் சின்னமான தாஜ்மஹாலுக்கும் செல்லவுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
ரஷ்யாவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்ட கையோடு திரு அமீர் புதுடெல்லிக்குச் சென்றுள்ளார்.