இந்தியாவில் இருந்து 58 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா செல்லும் சடலம்

1 mins read
436a320c-dacf-4c0b-8fa2-15843e2be4cc
படம்: டுவிட்டர் -

அமெரிக்காவின் தலை சிறந்த ராணுவத் தளபதிகளில் ஒருவரான மேஜர் ஹேரி கிலைன்பெக் பிக்கெட்டின் சடலத்தை அமெரிக்காவுக்கு அனுப்பியுள்ளது இந்தியா.

உலகப்போர் ஒன்று, இரண்டு ஆகியவற்றில் போரிட்ட மேஜர் ஹேரி 1965ஆம் ஆண்டு இந்தியாவின் டார்ஜிலிங் சென்றபோது காலமானார்.

அதைத்தொடர்ந்து அவரது சடலம் அங்கேயே புதைக்கப்பட்டது. இருப்பினும் அவரது உடலை தாய் நாட்டில் தான் அடக்கம் செய்ய வேண்டும் என்று திரு ஹேரியின் குடும்பத்தினர் அரசாங்கத்தைக் கேட்டுவந்தனர்.

கிட்டத்தட்ட 58 ஆண்டுகளுக்குப் பிறகு திரு ஹேரியின் சடலம் அமெரிக்காவிற்கு கொண்டு செல்லப்பட்டு மீண்டும் புதைக்கப்படவுள்ளது.

திரு ஹேரியின் சடலத்தை தாய்நாட்டிற்கு அனுப்பி வைக்க உதவிய மேற்கு வங்க அரசாங்கத்திற்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

திரு ஹேரியின் சடலம் இம்மாத இறுதிக்குள் அமெரிக்கச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்