புதிய அறிக்கை: ஹிண்டன்பர்க் 'புதுக்குண்டு'

புதிய அறிக்கை: ஹிண்டன்பர்க் 'புதுக்குண்டு'

23 Mar 2023 - 9:17 pm

1 mins read

மிக விரைவில் புதிய ஆய்வறிக்கை ஒன்றை வெளியிடப் போவதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்ட்பர்க் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து அதானி குழும நிறுவனம் குறித்தோ அல்லது வேறு ஏதேனும் இந்திய நிறுவனங்கள் பற்றியோ அந்த ஆய்வு நிறுவனம் புதிய தகவல்களை வெளியிடுமா எனும் பரபரப்பு நிலவி வருகிறது.

அண்மையில் இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனமான அதானி குழுமம் குறித்து ஹிண்டன்பர்க் வெளியிட்ட தகவல்களால் அதானி குழும நிறுவனங்கள் ஆட்டம் கண்டுள்ளன.பங்குச்சந்தையில் அந்நிறுவனப் பங்குகள் பெரும் வீழ்ச்சியைக் கண்டன.

ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை அதானி நிறுவனம் முற்றிலுமாக மறுத்திருந்தது.

இந்த விவகாரம் காரணமாக, இந்திய அரசியல் களத்திலும் பரபரப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில், அதானி குழும முறைகேடுகள் எனக் குறிப்பிட்டு, ஆய்வறிக்கை வெளியிட்ட ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம், மிக விரைவில் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அரசியல் களத்தில் மீண்டும் பரபரப்பு எழுந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்