அக்னி-3 ஏவுகணைச் சோதனை வெற்றி

அக்னி-3 ஏவுகணைச் சோதனை வெற்றி

1 mins read
d48166a9-f379-4846-adb4-6e577c37ddcb
‘அக்னி 3’ ஏவுகணை. - படம்: தினத்தந்தி

சண்டிபூர்: இந்தியாவின் தற்காப்புத் திறனை மெருகேற்றும் வகையில், அக்னி-3 நடுத்தர ரக பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

ஒடிசா மாநிலம் சண்டிபூரில் அக்னி-3 ஏவுகணைச் சோதனை வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக நடைபெற்றது. முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை, அனைத்துத் தொழில்நுட்ப அளவீடுகளிலும் மிகத் துல்லியமாகச் செயல்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

திட எரிபொருள் மூலம் இரண்டு நிலைகளில் இயங்கும் இந்த ஏவுகணை, 3,000 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை, 1,500 கிலோ எடையுள்ள ஆயுதங்களைச் சுமந்து சென்று தாக்கி அழிக்கும் வல்லமை வாய்ந்தது.

16.7 மீட்டர் நீளமும், 48,300 கிலோ எடையும் கொண்ட இது, அக்னி ஏவுகணை வரிசையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

700 கி.மீ. முதல் 5,000 கி.மீ. வரை சென்று தாக்கும் வகையில் இந்த ஏவுகணை வரிசைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்