வரலாறு படைக்கக் காத்திருக்கும் ‘அக்னி 6’ ஏவுகணை

வரலாறு படைக்கக் காத்திருக்கும் ‘அக்னி 6’ ஏவுகணை

1 mins read
08560c0b-8a3d-4a80-aded-f5a13c053935
அமெரிக்​கா, ரஷ்​யா, சீனா, பிரான்​ஸ், பிரிட்​டன் ஆகிய ஐந்து நாடு​கள் மட்​டுமே கண்​டம் விட்டு கண்​டம் பாயும் ஏவு​கணை சக்​தி​யைக் கொண்​டுள்​ளன. - கோப்புப் படம்: நியூஸ் 18

புதுடெல்லி: இந்​தி​யா​வின் முதல் கண்​டம் விட்டு கண்​டம் பாயும் ‘அக்​னி-6’ ஏவு​கணையைப் பாது​காப்பு ஆராய்ச்சி மற்​றும் மேம்​பாட்டு அமைப்பு (டிஆர்​டிஓ) வடிவமைத்துள்​ளது.

ஏறக்குறைய 10,000 கிலோ மீட்டர் தூரம் பறந்து சென்று துல்லியமாகத் தாக்குதல் நடத்தும் என்றும் இந்த ஏவுகணை வரலாறு படைக்கத் தயாராக உள்ளது என்றும் இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

‘அக்னி 6’ ஏவுகணை தொடர்பான சோதனை நடவடிக்கைகளை நடத்தத் தயா​ராக இருப்​ப​தாக​வும் அரசின் அனு​ம​திக்​காகக் காத்​திருப்​ப​தாக​வும் டிஆர்​டிஓ தலை​வர் சமீர் வி.​காமத் அண்மையில் தெரிவித்தார்.

இந்​நிலை​யில், ‘அக்னி 6’ ஏவுகணையின் துணையோடு வல்​லரசு பாதையை நோக்கி இந்​தியா முன்​னேறுகிறது என்று பாஜக தனது அதிகாரபூர்வ சமூக ஊடகத்தில் குறிப்பிட்டுள்ளது.

“இந்த ஏவு​கணை இந்​திய ராணுவத்தின் செயல்பாடுகளுக்குப் பக்கபலமாக இருக்கும் என்றும் இந்தி​யா​வின் பாது​காப்பை உறுதி செய்யும் என்றும் பாஜக கூறியுள்ளது.

எதிரிகள் இந்திய எல்லைப் பகுதி வழியாக மேற்கொள்ளும் நடவடிக்கைகளை முறியடிப்பதில் ‘அக்னி 6’ ஏவுகணை முக்கியப் பங்கு வகிக்கும். உலகின் மிக​வும் சக்​தி​வாய்ந்த நாடு​களின் வரிசை​யில் நம்மை நிலைநிறுத்த இந்த ஏவுகணை உதவும் என பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்தனர்.

இது​வரை அமெரிக்​கா, ரஷ்​யா, சீனா, பிரான்​ஸ், பிரிட்​டன் ஆகிய ஐந்து நாடு​கள் மட்​டுமே கண்​டம் விட்டு கண்​டம் பாயும் ஏவு​கணை சக்​தி​யைக் கொண்​டுள்​ளன.

இப்​போது, அந்த வரிசை​யில் இந்தியாவும் இடம்பெற உள்ளது.

குறிப்புச் சொற்கள்