புதுடெல்லி: இனி தேசிய நெடுஞ்சாலைகளில் ‘ஏஐ’ தொழில்நுட்பம் மூலம் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சுங்கச்சாவடிகளுக்கு இடையே கார்கள் மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல ஏற்பாடு செய்யப்படும் என நாடாளுமன்றத்தில் எழுத்துபூர்வமாக அளித்த பதில் ஒன்றில் சாலைப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது.
இதற்காகவே பொறுத்தப்படும் கேமராக்கள் மூலம் வாகனத்தின் எண், மற்றும் ‘பாஸ்ட் டேக்’ (Fast Tag) ஆகியவை பதிவு செய்யப்பட்டு தானாக வங்கிக் கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ளப்படும்.
“நவீன தொழில்நுட்பம் மூலம் வாகனம் செல்லும் வேகத்தைக் கணக்கிட முடியும். செயற்கைக்கோள், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றையும் பயன்படுத்த முடியும்.
“இதன்மூலம் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் காத்திருப்பது குறையும், எரிபொருள் மிச்சமாகும். மேலும் மத்திய அரசுக்கு ரூ.6,000 கோடி மிச்சமாகும்,” என்று அந்தப் பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

