இந்திய ராணுவ வீரர்களுக்கு சலுகையை அறிவித்தது ஏர் இந்தியா

1 mins read
6c82cf7a-63fc-44e9-8835-fc9e2f4ec01e
ஏர் இந்தியா விமானம் சலுகை அறிவித்துள்ளது. - படம்: ஊடகம்

புதுடில்லி: ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யும் இந்திய ராணுவத்தினருக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

26 இந்தியர்களை கொன்று குவித்த பஹல்காம் தாக்குதலுக்கு, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவத்தினர் பதிலடி கொடுத்துள்ளனர்.

அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்திய ராணுவ வீரர்கள் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில் மே 31ஆம் தேதி வரை பயணிப்பதற்கான முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுக்களை, இந்திய பாதுகாப்புப் படையினர் ரத்து செய்தால், 100 விழுக்காட்டு பணம் திரும்பி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜூன் 30 வரையில் எந்தவித கட்டணமும் இன்றி ஒருமுறை பயண நேரத்தை மாற்றியமைக்கும் சலுகையும் வழங்கப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்