ஏர் இந்தியா விபத்து: அடையாளம் காணப்பட்டுள்ள 200க்கும் மேற்பட்ட உடல்கள்

1 mins read
2433b3dc-6944-4a8b-b5f8-4e96da531830
அகமதாபாத்தில் விழுந்து நொறுங்கிய ஏர் இந்தியா விமானம். - படம்: ராய்ட்டர்ஸ்

அகமதாபாத்: இந்தியாவின் அகமதாபாத் நகரில் விழுந்து நொறுங்கிய ஏர் இந்தியா விமானத்தில் கொல்லப்பட்டோரில் 200க்கும் மேற்பட்டோரின் உடல்கள் மரபணுச் சோதனைகள் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளன.

புதன்கிழமையன்று (ஜூன் 18) இந்திய அதிகாரிகள் இத்தகவலை வெளியிட்டனர். விபத்தில் கொல்லப்பட்டோரின் உறவினர்கள் உடல்களைப் பெறுவதற்காகக் காத்திருப்பது விரைவில் ஒரு முடிவுக்கு வரக்கூடும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.

அகமதாபாத்தின் குடியிருப்புப் பகுதி ஒன்றில் இம்மாதம் 12ஆம் தேதி விழுந்து நொறுங்கிய ஏர் இந்தியா விமானத்தில் 242 பயணிகளும் ஊழியர்களும் இருந்தனர். அவர்களில் ஒருவர் மட்டும் உயிர் பிழைத்தார்.

விபத்தில் நிலத்தில் இருந்த 38 பேர் கொல்லப்பட்டனர்.

விபத்தில் உறவினர்களைப் பறிகொடுத்த குடும்பத்தார் மரபணு மாதிரிகளை வழங்கி கொல்லப்பட்டவர்களை அடையாளம் காண உதவிவந்துள்ளனர். மாண்டோரை அடையாளம் காணும் நடவடிக்கையை மிகவும் மெதுவாக மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டது.

“பிற்பகல் இரண்டு மணி நிலவரப்படி 202 மரபணு மாதிரிகளுடன் பொருந்துபவை அடையாளம் காணப்பட்டுள்ளன,” என்று குஜராத் மாநில உள்துறை அமைச்சர் ஹர்‌ஷ் சங்கவி புதன்கிழமை எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

குறிப்புச் சொற்கள்