தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெடிகுண்டு மிரட்டலால் அவசரமாகத் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்

1 mins read
c3d0a608-5dc4-42ed-a664-48189228cdf3
படம்: - இந்திய ஊடகம்

திருவனந்தபுரம்: மும்பையில் இருந்து 135 பயணிகளுடன் திருவனந்தபுரம் சென்ற ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறக்கப்பட்டு பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

ஏஐ 657 விமானம் ஆகஸ்ட் 22ஆம் தேதி அதிகாலை 5.45 மணிக்கு (இந்திய நேரம்) மும்பையிலிருந்து புறப்பட்டது. புறப்பட்ட சற்று நேரத்தில் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

விமானம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதும் பயணிகள் அனைவரும் விரைவாக அதிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

பின்னர் அந்த விமானம் தனிமைப்படுத்தப்பட்டு, வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.

பயணிகள் யாருக்கும் பாதிப்பு இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்