இஸ்ரேல் செல்லும் விமானச் சேவை ஜூலை இறுதி வரை நிறுத்தம்: ஏர் இந்தியா

இஸ்ரேல் செல்லும் விமானச் சேவை ஜூலை இறுதி வரை நிறுத்தம்: ஏர் இந்தியா

1 mins read
f1bc872b-e8cf-49b5-9888-8e90a9b8689f
மத்திய கிழக்கில் போர் அபாயம் நீடிப்பதால் இஸ்‌ரேல் செல்லும் விமானச் சேவை நிறுத்தத்தை ஜூலை 31 வரை அது நீட்டித்துள்ளது. - படம்: தமிழ் முரசு

புதுடெல்லி: மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக இஸ்‌ரேல் செல்லும் விமானச் சேவை ஜூலை இறுதி வரை நிறுத்தி வைக்கப்படும் என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

ஜூன் வரை இஸ்ரேல் செல்லும் விமானங்களை இடைநிறுத்தம் செய்வதாக மே மாதத் தொடக்கத்தில் ஏர் இந்தியா அறிவித்திருந்தது.

மத்திய கிழக்கில் போர் அபாயம் நீடிப்பதால் இஸ்‌ரேல் செல்லும் விமானச் சேவை நிறுத்தத்தை ஜூலை 31 வரை அது நீட்டித்துள்ளது.

ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் போரைத் தொடங்கியதிலிருந்து பல நாடுகளின் விமானச் சேவைகள் மிக மோசமான பாதிப்பைச் சந்தித்து வருகின்றன. வான்வழி கட்டுப்பாடுகள், எரிபொருள் விலை ஏற்றம் போன்ற சவால்கள் ஏற்பட்டுள்ளன.

உலகம் முழுவதும் பல விமானச் சேவை நிறுவனங்கள் இஸ்ரேல் மற்றும் ஈரானின் வான்வழியைத் தவிர்த்து வருகின்றன. இஸ்ரேலிலும் சில விமான நிறுவனங்கள் மட்டுமே சேவை வழங்கி வருகின்றன.

ஏர் இந்தியா விமானச் சேவை நிறுத்தத்தால் இந்தியா திரும்ப முடியாமல் இஸ்ரேலில் உள்ள 40,000 இந்தியர்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர். சில விமானச் சேவைகளின் பயணச்சீட்டு விலை அதிகரித்துள்ளதால் தொழிலாளர்களுக்கு அது கட்டுப்படியான விலையில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்