அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து இந்தியாவின் டெல்லிக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் மருத்துவ நெருக்கடி காரணமாக லண்டனுக்குத் திருப்பி அனுப்பப்பட்டது.
இந்த இடைநில்லா விமானச்சேவை, நார்வே மேல் பறந்துகொண்டிருந்தபோது மருத்துவ நெருக்கடி ஏற்பட்டதால் அவசரகால உத்தரவின் கீழ் லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
பயணத்தின்போது விமானத்தில் 350க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
மருத்துவக் கண்காணிப்புக்காக பாதிக்கப்பட்ட பயணி மட்டும் லண்டனில் இருப்பதாகவும் மற்ற பயணிகள் டெல்லி சென்றதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இதனால், விமானம் ஏறத்தாழ 7 மணி நேரம் தாமதமானதாகக் கூறப்பட்டது.
பொதுவாக, ஏர் இந்தியா விமானம் மூலம் நியூயார்க்கில் இருந்து டெல்லி செல்ல கிட்டத்தட்ட 14 மணி நேரம் ஆகும்.

