தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

துர்கா பூசைக்காக அமைக்கப்பட்ட ஏர் இந்தியா விமான விபத்து பந்தலால் சர்ச்சை

1 mins read
827bc7c8-b42c-4490-9337-bbeac40ea5e4
ஏர் இந்தியா விமானம் ஒன்று அடுக்குமாடிக் கட்டடம் மீது மோதுவதுபோல் அந்தப் பந்தல் சித்திரிக்கப்பட்டிருந்தது. - படம்: இணையம்

கோல்கத்தா: துர்கா பூசை கொண்டாட்டத்துக்காக அமைக்கப்பட்ட பந்தல் ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் துர்கா பூசை ஆண்டுதோறும் விமரிசையாகக் கொண்டாடப்படும். இந்த ஆண்டும் கொண்டாட்டங்கள் களைகட்டின.

அந்த வகையில், குஜராத்தில் கடந்த ஜூன் மாதம் நிகழ்ந்த ஏர் இந்திய விமான விபத்தைச் சித்திரிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த பந்தல் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

ஏர் இந்தியா விமானம் ஒன்று அடுக்குமாடிக் கட்டடம் மீது மோதுவதுபோல் அந்தப் பந்தல் சித்திரிக்கப்பட்டிருந்தது. 260 பேரைக் காவு வாங்கிய அந்தத் துயரச் சம்பவத்தை அனைவரும் மறக்க வேண்டும் என்று கருதும் நிலையில், அச்சம்பவத்தை நினைவூட்டும் விதமாக பந்தல் அமைத்ததற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக சமூக ஊடகங்களில் பல்வேறு விவாதங்கள் நடந்தேறி வருகின்றன.

குறிப்புச் சொற்கள்