ஏர் இந்திய விமானத்தில் கடுமையான அதிர்வுகள்; பயணிகள் சிலருக்கு அடி

ஏர் இந்திய விமானத்தில் கடுமையான அதிர்வுகள்; பயணிகள் சிலருக்கு அடி

1 mins read
2b61a6f9-b3d2-470c-917b-f33daff071b5
படம்: ராய்ட்டர்ஸ் -

இந்தியாவின் டெல்லியில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்குச் சென்றுகொண்டிருந்த ஏர் இந்திய விமானத்தில் கடுமையான அதிர்வுகள் இருந்தன.

அதனால் விமானத்தில் இருந்த 7 பயணிகளுக்கு காயமில்லாத அடிகள் ஏற்பட்டுள்ளது. அடிபட்டவர்கள் யாரும் மருத்துவமனையில் சேர்க்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

விமானத்தில் பயணம் செய்த மருத்துவரும் தாதியும் பாதிக்கப்பட்ட சக பயணிகளுக்கு மருத்துவ உதவிகளை செய்ததாக இந்திய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.

விமானம் சிட்னியில் தரையிறங்கிய பிறகு மூன்று பயணிகளுக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டதாக அது கூறியது.

சம்பவம் குறித்து ஏர் இந்தியா எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

குறிப்புச் சொற்கள்