மும்பை: ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் தலைமைத்துவ மாற்றத்தை டாடா சன்ஸ் குழுமம் பரிசீலித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது ஏர் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ள கேம்பல் வில்சனின் பதவி மறுபரிசீலனைக்கு உள்ளாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தற்போது டாடா குழுமம், முக்கியமான அனைத்துலக விமான நிறுவனங்களின் மூத்த நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
ஏர் இந்தியாவின் தலைவரும் டாடா குழுமத் தலைவருமான என். சந்திரசேகரனும் நடவடிக்கை எடுத்துவருகிறார்.
அவர் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட சில விமான நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடத்தியுள்ளார்.

