தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மிகவும் மோசமான நிலையில் டெல்லி, மும்பையின் காற்றின் தரம்

1 mins read
c23fc4bf-9757-4b61-8ca6-9e0ddda1471a
டெல்லியில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதலே அடர்த்தியான புகை சூழ்ந்து காணப்பட்டது.  - படம்: இபிஏ

புதுடெல்லி: இந்தியா முழுவதும் கடந்த சில நாள்களாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. பல நகரங்களில் பட்டாசுகள் அதிக அளவில் வெடிக்கப்பட்டன.

தலைநகர் டெல்லியில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதலே அடர்த்தியான புகை சூழ்ந்து காணப்பட்டதால் காற்றின் தரம் மோசமான நிலையை எட்டியது.

இந்நிலையில், டெல்லி ஆனந்த் விஹார் பகுதியில் அதிகபட்சமாக காற்றின் தரக் குறியீடு 396ஆக பதிவாகியுள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது.

டெல்லியின் பல்வேறு பகுதிகளில் காற்று மாசுபாட்டைக் குறைக்க வாகனம் மூலம் தண்ணீர் தெளிக்கப்பட்டது.

காற்றின் தரம் மோசமடைந்து வருவதால், மும்பை நகரின் சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை புகை மண்டலமாகக் காட்சி அளித்தது.

அதேபோல், உத்தரப் பிரதேசத்தின் ஹாபூர் நகரமும் புகை மண்டலமாகக் காட்சி அளித்தது.

டெல்லி, மும்பையின் பல்வேறு பகுதிகளில் காற்று மாசுடன், பனிமூட்டமும் அதிகளவில் இருந்தது. இதனால் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாததால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.

குறிப்புச் சொற்கள்