தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

2026க்குள் இந்திய ரயில்வே முழுமையாக மின்மயமாகும்: ரயில்வே அமைச்சர்

1 mins read
2410ad00-daf4-403a-b9fe-51427b6d7659
2026க்குள் இந்திய ரயில்வே முழுமையாக மின்மயமாக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார். - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: இந்த 2025-26ஆம் நிதியாண்டுக்குள் இந்தியாவின் ரயில் பாதை முழுமையாக மின்மயமாகும் என்று இந்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலத்துடன் மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தம் கையொப்பமான பிறகு, அனைத்துலக முதலீட்டாளா்கள் மாநாட்டில் அமைச்சா் காணொளி வழியாக உரையாற்றினார்.

தற்போது இந்தியாவில் 97 விழுக்காடு ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன. 2025-26ஆம் நிதியாண்டுக்குள் அனைத்து ரயில் பாதைகளும் மின்மயமாக்கப்பட்டு விடும்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களில் இருந்து ஏற்கெனவே 1,500 மெகாவாட் மின்சாரம் ரயில்வேக்கு விநியோகிக்கப்படுகிறது. மத்தியப் பிரதேச அரசின் ‘ரேவா அல்ட்ரா மெகா சோலாா்’ நிறுவனத்துடன் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 25) கையொப்பமான 170 மெகாவாட் மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தம் இதில் ஒரு முக்கியமான படியாகும் என்றார் அவர்.

வரும் 2030ஆம் ஆண்டுக்குள் பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை அடைவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

குறிப்புச் சொற்கள்