தொகுதி பங்கீடு: அமித் ஷாவை சந்தித்து டி.டி.வி. தினகரன் பேச்சு

தொகுதி பங்கீடு: அமித் ஷாவை சந்தித்து டி.டி.வி. தினகரன் பேச்சு

2 mins read
7d56201b-158a-41db-ab42-500c0d7e37eb
டி.டி.வி. தினகரன் - கோப்புப் படம்: மாலை மலர்

புதுடெல்லி: தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அதிமுக-பாஜக கூட்டணி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இரு கட்சிகளின் தொண்டர்களும் இதனை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

இதற்கிடையே, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சரைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது தொகுதிப் பங்கீடு, தமிழக அரசியல் நிலவரம் குறித்து இருவரும் கலந்துரையாடினர்.

மத்திய அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசிய பிறகு செய்தியாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்தார்.

அடுத்த நான்கு நாள்களில் தொகுதிப் பங்கீடு குறித்த அனைத்துப் பேச்சுவார்த்தைகளும் நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எந்த தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு அதிகமோ அங்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றார் எடப்பாடி பழனிசாமி.

இன்னும் ஒரு வாரத்தில் அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிடப்போவதாகவும் அவர் கூறினார்.

இதையடுத்து அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அன்புமணி தலைமையிலான பாமக, டி.டி.வி. தினகரன் தலைமையிலான அ.ம.மு.க. ஆகிய கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சு வார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன.

அன்புமணி, டி.டி.வி. தினகரன் ஆகிய இருவரும் வெள்ளிக்கிழமை காலை டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

இருவரும் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு நடத்தவிருக்கின்றனர்.

இந்த நிலையில் டெல்லியில் உள்ள இல்லத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் சந்தித்துள்ளார். என்.டி.ஏ. கூட்டணியில் உள்ள டி.டி.வி. தினகரன் தொகுதிப் பங்கீடு குறித்து அமித் ஷாவுடன் பேசினார்.

குறிப்புச் சொற்கள்