தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டெல்லி சட்டசபைத் தேர்தலில் மும்முனைப் போட்டி; வெற்றி பெறும் முனைப்பில் ஆம் ஆத்மி

2 mins read
6fa02e2a-c2a6-42be-b7af-867b7ee2a8a9
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால். படம்: பேஸ்புக்/ கெஜ்ரிவால். - கோப்புப்படம்: ஊடகம்
multi-img1 of 2

புதுடெல்லி: நாட்டின் தலைநகரான டெல்லியில் சட்டசபைத் தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. அதற்கான வேட்பு மனுவை டிசம்பர் 10 முதல் 17ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதையடுத்து, டெல்லியில் தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்தத் தேர்தலில் மும்முனை போட்டி ஏற்பட்டு உள்ளது. ஆளும் ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. என 3 முக்கிய மூன்று கட்சிகளிடையேதான் கடும் போட்டி என்று சொல்லப்படுகிறது.

இதில், ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் மூன்று முறை வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சியின் தலைவரும் முன்னாள் முதல் அமைச்சருமான கெஜ்ரிவால் தேர்தலை முன்னிட்டு தீவிர பணியாற்றும்படி கட்சி தொண்டர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

நான்காவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்புடன் ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் விறுவிறுப்பாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

காங்கிரசுடன் கூட்டணி இல்லை என அறிவித்த அக்கட்சி, இந்த முறை தனித்துப் போட்டியிட்டு வெற்றியைக் கைப்பற்றும் நோக்கில், தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே முழு அளவிலான வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டது.

கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த டெல்லி சட்டசபைத் தேர்தலில், ஆம் ஆத்மி 62 இடங்களை கைப்பற்றியது. பா.ஜ.க. 8 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. ஒற்றை இலக்க எண்களிலேயே பா.ஜ.க. வெற்றி பெற்ற சூழலில், காங்கிரசுக்கு தொகுதியே கிடைக்காத நிலை ஏற்பட்டது.

அதற்கு முந்திய தேர்தலில் ஆம் ஆத்மி 67 தொகுதிகளைக் கைப்பற்றியது. எனினும், அடுத்த தேர்தலில் 5 தொகுதிகளை இழந்தது. இது பா.ஜ.க.வுக்கான சாதக நிலையை காட்டுகிறது என்றபோதிலும், தொடர்ந்து வெற்றி பெற்று, டெல்லியில் தற்போது ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி, இந்த முறையும் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைக்கும் முனைப்பில் உள்ளது.

இதற்காக கல்வி, சுகாதாரம் மற்றும் பல்வேறு நல திட்டங்களில் கவனம் செலுத்தி வருகிறது. அது மக்களிடம் எந்த அளவுக்கு சென்றடைந்து, பதிலுக்கு பலனைத் தரும் என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விசயம்.

தேர்தல் முடிந்து மூன்றாவது நாளான ஜனவரி 8ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்