புதுடெல்லி: கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் விவகாரத்தில் சிக்கிய ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ அமானதுல்லா கானுக்கு டெல்லி நீதிமன்றம் ஒன்று பிணை வழங்கியுள்ளது.
இஸ்லாமிய சட்டத்தின்கீழ் நன்கொடை நடவடிக்கைகளுக்காகவும் சமயம் சார்ந்த காரணங்களுக்காகவும் நிரந்தரமாக ஒதுக்கப்பட்ட சொத்துகளைக் கவனிக்கும், தலைநகர் டெல்லியின் வக்ஃபு வாரியத்துடன் சம்பந்தப்பட்ட கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் விவகாரத்துடன் கானுக்குத் தொடர்பிருப்பதாக நம்பப்படுகிறது. வக்ஃபு வாரியத்தினுள் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் நடவடிக்கைகளின் மூலம் ஈட்டப்பட்ட நிதியை கான் நல்ல பணமாக்கியதாக கடந்த அக்டோபர் மாதம் 29ஆம் தேதியன்று இந்தியாவின் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்திருந்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டது.
இப்போது 100,000 ரூபாய் (S$1,594) தொகைக்கு அவருக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது.
ஓக்லா பகுதியில் இருக்கும் கானின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் இரண்டாம் தேதியன்று அவர் கைது செய்யப்பட்டார். அதிலிருந்து அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு வந்தார்.
விசாரணையின்போது கான் கேள்விகளுக்கு நேரடியாகப் பதிலளிக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. அதன் காரணமாக கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குவதற்கு எதிரான சட்டத்தின்கீழ் மேலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அதனால், கானைத் தடுப்புக் காவலில் வைக்கும் காலம் பலமுறை நீட்டிக்கப்பட்டது.

