ஸ்ரீநகர்: இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தில் ஒரு மாத கால அமர்நாத் யாத்திரையில் 400,000க்கும் மேற்பட்ட இந்துக்கள் பங்கேற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாகிஸ்தானுடனான மோதல்களுக்குப் பின் பல வாரங்களுக்குப் பிறகு பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலவிய வேளையில் அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக முடிவுக்கு வந்துள்ளது.
யாத்திரை ஜூலை 3ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9 ஆம் தேதி அதிகாரபூர்வமாக முடிவடைகிறது. ஆனால் பலத்த மழையால் குறுகிய பாதைகள் சேதமடைந்து, முன்கூட்டியே முடிவுக்கு வந்ததாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
அதாவது ஒரு வாரத்துக்கு முன்னதாக அமர்நாத் யாத்திரை முடித்து கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாண்டில் ஏறக்குறைய 415,000 பக்தர்கள் அமர்நாத் யாத்திரை மேற்கொண்டு பனிலிங்கத்தை தரிசித்துள்ளனர்
ஆகஸ்ட் 2 ஆம் தேதி தாமதமாக வெளியிடப்பட்ட அறிக்கையில் யாத்ரீகர்களின் எண்ணிக்கையை (415,000) அதிகாரி விஜய் குமார் பிதுரி உறுதிப்படுத்தினார்.

