தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியாவில் உலகின் ஆகப் பெரிய தரவு மையத்தை அமைக்கும் அம்பானி

1 mins read
a3f98a72-178f-40aa-8eae-cb199a41e5fe
ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி. - படம்: பிடிஐ

ஜாம்நகர்: இந்தியப் பெருஞ்செல்வந்தரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் உலகிலேயே ஆகப் பெரிய தரவு மையத்தை அமைக்கத் திட்டமிட்டு வருவதாக புளூம்பெர்க் செய்தி தெரிவிக்கிறது.

அம்மையம் குஜராத் மாநிலத்தின் ஜாம்நகரில் அமையவுள்ளது.

செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழும் என்விடியா (NVIDIA) நிறுவனத்திடமிருந்து ‘ஏஐ’ பகுதி மின்கடத்திகளை ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கவுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

சென்ற ஆண்டு அக்டோபரில் நடந்த என்விடியா ஏஐ உச்சநிலை மாநாட்டின்போது, இந்தியாவில் ஏஐ உள்கட்டமைப்பை உருவாக்க இணைந்து செயல்படவுள்ளதாக ரிலையன்சும் என்விடியாவும் அறிவித்தன.

அதற்கு முந்திய செப்டம்பர் மாதத்தில், இந்தியாவில் ஏஐ மீத்திறக்கணினிகளைத் (சூப்பர்கம்ப்யூட்டர்) தயாரிக்க பங்காளித்துவம் செய்துகொண்டுள்ளதாக அவ்விரு நிறுவனங்களும் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் ஏஐ இலக்குகளை எட்ட குறிப்பிடத்தக்க ஆதரவளிப்பதாக இந்திய அரசாங்கமும் உறுதியளித்திருந்தது. தொழில்முனைவர்களுக்கு நிதியாதரவு, ஏஐ திட்டப்பணிகள் உள்ளிட்டவற்றுக்கு 10,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை முதலீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆயினும், அம்முயற்சிகள் பல்வேறு சவால்களை எதிர்நோக்கி வருகின்றன.

குறிப்புச் சொற்கள்