புதுடெல்லி: சோனியாவின் தன்வரலாற்று நூலை வெளியிட இருப்பதாக அமெரிக்காவின் ஹார்பர் காலின்ஸ் பதிப்பகம் அறிவித்துள்ளது.
நூல், நவம்பர் 10ஆம் தேதி இந்தியாவில் வெளியிடப்படும் என்று ஹார்பர் காலின்ஸ் பதிப்பகம் சமூக வலைதளத்தில் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவின் மனைவியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான 79 வயது சோனியா காந்தியின் ‘பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்’ என்ற தன்வரலாற்று நூலை அனைத்துலக அளவில் ‘பென்குயின் ரேண்டம் ஹவுஸ்’ நிறுவனத்தின் ஒரு பிரிவான ‘ஆல்பிரட் ஏ நாப்’ வெளியிடுவதாக இருந்தது.
நூலில் சில மாற்றங்களைச் செய்து, சில பகுதிகளை நீக்குமாறு பதிப்பகம் வைத்த கோரிக்கையை சோனியா ஏற்க மறுத்ததை அடுத்து, இந்தியாவில் அந்த நூலை நாங்கள் வெளியிடவில்லை’ என்று ‘பென்குயின் இந்தியா’ அறிவித்தது.
சோனியா காந்தியின் வாழ்க்கை, இந்தியாவின் அரசியல் சூழல் குறித்த பதிவாக இந்நூல் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


