அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்: உலக ஜவுளிச் சந்தையில் இந்தியா புதிய சாதனை

அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்: உலக ஜவுளிச் சந்தையில் இந்தியா புதிய சாதனை

1 mins read
e92ee310-2b7f-4794-99df-2c17e4733172
அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தால் இந்திய ஜவுளித் துறைக்கு உலக அளவில் பெரும் ஏற்றுமதிக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. - படம்: கோப்புப்படம் தினத்தந்தி

புதுடெல்லி: இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக உடன்பாடு இறுதி செய்யப்பட்டுள்ளதால், இந்திய ஜவுளித் துறைக்கு உலக அளவில் பெரும் ஏற்றுமதி வாய்ப்பு கிடைத்துள்ளது.

அமெரிக்காவின் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடைச் சந்தையில் இந்தியப் பொருள்கள் தடையின்றி நுழைய இந்த ஒப்பந்தம் களம் அமைத்துக் கொடுக்கிறது.

இதன் விளைவாக, ஜவுளி ஏற்றுமதியில் இதுவரை போட்டியாக இருந்த சீனா, பாகிஸ்தான், வியட்நாம் போன்ற நாடுகளை இந்தியா பின்னுக்குத் தள்ளும் நிலை உருவாகியுள்ளது.

இந்தியத் தயாரிப்புகளுக்கான தேவை அமெரிக்க சந்தையில் அதிகரிப்பதால், உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்குப் பெரும் லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் தொழில் வளர்ச்சி மூலமாகப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாவதுடன், நாட்டின் பொருளாதாரமும் வலுவடையும் எனத் தொழில் துறையினர் கருதுகின்றனர்.

இந்திய ஜவுளித் துறை உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ இந்த வாய்ப்பு ஒரு முக்கியக் காரணியாக அமையும்.

குறிப்புச் சொற்கள்