அமித் ஷாவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம்: மாயாவதி அறிவிப்பு

அமித் ஷாவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம்: மாயாவதி அறிவிப்பு

2 mins read
d8772bb1-799a-4d9a-af98-347493fd1b50
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி. - படம்: இந்திய ஊடகம்
Google News Preferred Icon

புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அம்பேத்கர் தொடர்பாக வெளியிட்ட கருத்தை திரும்பப் பெற வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 24) நாடு முழுவதும் பகுஜன் சமாஜ் கட்சி போராட்டம் நடத்தும் என்று அக்கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.

மாநிலங்​களவை​யில் கடந்த செவ்​வாய்க்​கிழமை நடைபெற்​ற அரசியல் சாசனம் குறித்த விவாதத்​தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசும்​போது, “அம்​பேத்​கர்.. அம்பேத்​கர்.. அம்பேத்​கர் என முழக்​கமிடுவது இப்போது பழக்கமாகிவிட்​டது. இதற்குப் பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்​திருந்​தால், சொர்க்​கத்​தில் அவர்​களுக்கு இடம் கிடைத்​திருக்​கும்.

“அம்பேத்​கரின் பெயரை காங்​கிரஸ் எடுத்​துக்​கொள்​வ​தில் பாஜக மகிழ்ச்​சி​யடைகிறது. ஆனால் அவர் மீதான உண்மையான உணர்​வுகள் குறித்​தும் காங்​கிரஸ் பேச வேண்​டும்,” எனப் பேசியிருந்தார்.

அமித் ஷாவின் கருத்து தொடர்பாக மாயாவதி ‘எக்ஸ்’ பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அதில், “நாட்டின் தலித்துகள், பிற்படுத்தப்பட்ட மற்றும் புறக்கணிக்கப்பட்ட மக்கள் ஆகியோரின் சுயமரியாதை, மனித உரிமை, மனிதநேயம் மற்றும் நலனுக்காக அரசியல் சாசனத்தின் அசல் புத்தகத்தை எழுதியவர் அம்பேத்கர். கடவுளைப்போல அவர் மதிக்கப்படுகிறார். அவரை அமித் ஷா அவமரியாதை செய்தது மக்களின் மனதைப் புண்படுத்துகிறது.

“மாமனிதரான அம்பேத்கர் பற்றி அமித் ஷா நாடாளுமன்றத்தில் பேசிய வார்த்தைகளால், நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களும் மிகுந்த வருத்தமும் கோபமும் கொந்தளிப்பும் அடைந்துள்ளனர்.

“இந்தப் பின்னணியில் அமித் ஷா, தான் கூறியதை திரும்பப் பெற்று, மனந்திருந்த வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி கோரிக்கை விடுத்தது. அது இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

“எனவே, இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி டிசம்பர் 24 அன்று நாடு தழுவிய இயக்கத்தை நடத்த கட்சி முடிவு செய்துள்ளது. அன்றைய தினம், நாட்டின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் முற்றிலும் அமைதியான முறையில் போராட்டம் நடத்தப்படும்,” என மாயாவதி கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்