அத்வானியை விஞ்சிய அமித்ஷா

1 mins read
32ace204-4f6e-408a-96bd-181c9243b984
நீண்டகாலம் உள்துறை அமைச்சராக இருந்தவர் எனும் பெருமையைப் பெற்றார் அமித்ஷா. - படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: இந்தியாவில் உள்துறை அமைச்சராக அதிகக் காலம் பணியாற்றியவர் என்ற பெருமைக்கு உரியவரானார் அமித்ஷா.

கடந்த 2019 மே 30ஆம் தேதி உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற அவர், செவ்வாய்க்கிழமையுடன் (ஆகஸ்ட் 5) அப்பதவியில் 2,258 நாள்களை நிறைவுசெய்துள்ளார்.

இதன்மூலம் பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானியை அவர் விஞ்சியுள்ளார். 1998 மார்ச் 19 முதல் 2004 மே 22 வரை அத்வானி 2,256 நாள்களுக்கு உள்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கோவிந்த் பல்லப் பன்டின் சாதனைக்காலத்தையும் அமித்ஷா முறியடித்துள்ளார். 1955 ஜனவரி 10 முதல் 1961 மார்ச் 7 வரை, அதாவது 6 ஆண்டுகள் 56 நாள்களுக்கு பன்ட் உள்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.

அமித்ஷா தற்போது மத்திய உள்துறை அமைச்சர் பொறுப்புடன் கூட்டுறவுத் துறை அமைச்சராகவும் இருக்கிறார்.

மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்கும் குஜராத் மாநில உள்துறை அமைச்சராகவும் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவராகவும் அவர் இருந்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்