தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் செலுத்திய தொகை மும்மடங்காக உயர்வு

1 mins read
569542e0-8e6c-424f-b9d3-a83af242fb4d
கடந்த ஆண்டு, சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் தனிநபர் கணக்குகளில் செலுத்தப்பட்ட தொகையின் அளவு 11% அதிகரித்த நிலையில், மொத்த தொகை ரூ.3,675 கோடியாக இருந்தது. - கோப்புப்படம்: ஊடகம்

புதுடெல்லி: சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் செலுத்தியுள்ள தொகை, ரூ.37,600 கோடியாக அதிகரித்துள்ளது. இ்து கடந்த ஆண்டைவிட மூன்று மடங்கு அதிகம்.

இது தொடர்பாக சுவிஸ் தேசிய (நேஷனல்) வங்கி வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் இருந்து பெறப்பட்ட தொகைகளில் இருந்து பெரும்பாலானவை வங்கிகள், நிதி கணக்குகளிலேயே வந்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் தனிநபர் கணக்குகளில் செலுத்தப்பட்ட தொகையின் அளவு 11% அதிகரித்த நிலையில், மொத்த தொகை ரூ.3,675 கோடியாக இருந்தது.

சுவிஸ் வங்கிகளில் உள்ள, மொத்த இந்திய வைப்புத்தொகைகளில் இந்திய தனிநபர்களின் பங்களிப்பு பத்தில் ஒரு விழுக்காடு என்ற தகவல் சுவிஸ் தேசிய வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுவிஸ் வங்கிகளில், அதிக தொகை வைத்துள்ள நாடுகள் வரிசையில், பிரிட்டன் முதலிடமும் அமெரிக்கா இரண்டாம் இடமும் மேற்கிந்திய தீவுகள் மூன்றாம் இடமும் வகிக்கின்றன.

ஜெர்மனி, பிரான்ஸ், ஹாங்காங், லக்ஸம்பெர்க் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

குறிப்புச் சொற்கள்