தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆந்திரா பேருந்து விபத்து: கைப்பேசி மின்கலங்கள் வெடித்ததால் உக்கிரமடைந்த தீ

1 mins read
5c1ff821-450b-4fed-b88a-7f0cc8a10c2c
ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 24) அதிகாலை வேளையில் இந்த விபத்து நிகழ்ந்தது. - படம்: ஊடகம்

அமராவதி: அண்மையில் ஆந்திராவில் நிகழ்ந்த பேருந்து தீ விபத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்த சோகம் இன்னும் மறையாத நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து சில அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்தப் பேருந்தில் ரூ.46 லட்சம் மதிப்புள்ள 234 திறன்பேசிகள் இருந்ததும் விபத்தின்போது அவை அனைத்தும் வெடித்துச் சிதறியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைப்பேசிகள் வெடித்ததால்தான் தீ மேலும் உக்கிரமடைந்தது என்று தடயவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 24) அதிகாலை வேளையில் இந்த விபத்து நிகழ்ந்தது.

முன்னதாக பிரபல ஃபிளிப்கார்ட் நிறுவனம், ஹைதராபாத்தைச் சேர்ந்த மங்கநாத் என்ற தொழிலதிபருக்கு 234 திறன்பேசிகளை பார்சல் மூலம் அனுப்பியது.

தீ விபத்து ஏற்பட்டதும், இந்தக் கைப்பேசிகளின் மின்கலங்கள் வெடித்துச் சிதறியதாகவும் அப்போது எழுந்த சத்தத்தைக் கேட்க முடிந்ததாகவும் விபத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

ஆந்திரப் பிரதேச தீயணைப்புத் துறையின் இயக்குநர் ஜெனரல் பி.வெங்கடராமன் கூறுகையில், “திறன்பேசிகள் வெடித்ததோடு மட்டுமல்லாமல், பேருந்தின் குளிரூட்டி (ஏசி) அமைப்புக்குப் பயன்படுத்தப்படும் மின்கலங்களும் வெடித்தன,” என்றார்.

குறிப்புச் சொற்கள்