சீனாவில் யோகா, விளையாட்டுகளில் கின்னஸ் சாதனை படைத்த ஆந்திரா குடும்பம்

1 mins read
d27edf30-887f-4d40-9065-93e55fc352c1
கொனத்தலா விஜய் குடும்பத்தினர் அனைவரும் சாதனை படைத்துள்ளனர். - படம்: ஊடகம்

ராஜமுந்திரி: ஆந்திர மாநிலம் அனகாபல்லியைச் சேர்ந்த கொனத்தலா விஜய், 2012ஆம் ஆண்டு முதல் சீனாவில் வசித்து வருகிறார். இவர் யோகா ஆசிரியராகவும் நடன அமைப்பாளராகவும் உள்ளார்.

சீனாவில் யோகா மற்றும் நடனப் பள்ளி நடத்தி வருகிறார். 2021ஆம் ஆண்டில், யோகா பிரிவின் கீழ் கின்னஸ் உலகச் சாதனையில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தார். அஷ்டவக்ராசனம், மயூராசனம், பகாசனம் போன்ற மேம்பட்ட ஆசனங்களை உள்ளடக்கிய மிக நீண்ட யோகா அமர்வுக்கான சாதனையை அவர் பெற்றுள்ளார்.

‘தி ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’, ‘இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’, நோபெல் உலகச் சாதனைப் புத்தகங்களிலும் இடம்பெற்றுள்ளார்.

அவரது மனைவி ஜோதி, கர்ப்பத்தின் 9வது மாதத்தில் (குழந்தை பிறப்பதற்கு ஐந்து நாள்களுக்கு முன்பு) மேம்பட்ட யோகாசனங்களைச் செய்து உலகச் சாதனை படைத்துள்ளார்.

விஜய், ஜோதி தம்பதியரின் 14 வயது மகள் ஜஸ்மிதா, ஒரு நிமிடத்தில் ஒரே காலில் கயிற்றை வேகமாக இழுத்து சாதனை படைத்துள்ளார். இவர்களது ஐந்து வயது மகனான ஷங்கரும் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். ஒரு நிமிடத்தில் டிராம்போலினில் அதிக எண்ணிக்கையில் கயிற்றைத் தாண்டியதற்காக கின்னஸ் உலகச் சாதனையில் இடம்பிடித்தார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்