வாக்களிக்கக் கொடுத்த பணத்தை வாக்குப் பெட்டிக்குள் போட்ட வாக்காளர்

வாக்களிக்கக் கொடுத்த பணத்தை வாக்குப் பெட்டிக்குள் போட்ட வாக்காளர்

கோப்புப் படம்: நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

17 Nov 2026 - 7:26 pm

1 mins read

திருப்பதி: இந்தியாவில் தேர்தல்களின்போது வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் சம்பவங்கள் நிகழ்வதாக அவ்வப்போது செய்திகள் வெளியாவது உண்டு.

ஆனால், ஆந்திர மாநிலத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம் நேர்மையான வாக்களிப்புக்கு உதாரணமாக அமைந்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் இம்மாதத் தொடக்கத்தில் மண்டல, மாவட்ட அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற்றது.

சித்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பலமனேர் ஊரக மண்டலத்தில் உள்ள முரம் கிராமத்தில் வாக்களித்த ஒருவர், வாக்குச்சீட்டுடன் இரண்டு 500 ரூபாய் நோட்டுகளையும் குறிப்பு ஒன்றையும் வாக்குப் பெட்டியில் போட்டிருந்தார்.

வாக்கு எண்ணிக்கையின்போது பணத்துடன் குறிப்பை எடுத்துப் படித்த அதிகாரிகள் வியப்பில் மூழ்கினர்.

“ஐயா, நீங்கள் எனக்குக் கொடுத்த 1,000 ரூபாயைத் தயவுசெய்து திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள். பணத்திற்காக எனது வாக்கை விற்க மாட்டேன். நன்றி,” என்று அந்தக் குறிப்பில் எழுதப்பட்டிருந்தது.

அந்தச் சம்பவம் குறித்து திங்கட்கிழமை (நவம்பர் 16) கருத்துத் தெரிவித்த சித்தூர் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான சுமித் குமார், அந்த வாக்காளரின் செயல் ஜனநாயகத்தின் உண்மையான உணர்வைப் பிரதிபலிப்பதாகக் கூறினார்.

மேலும், இந்தச் செயல் நேர்மையாக வாக்களிப்பதைத் தூண்டுவதாகவும் அவர் பாராட்டினார்.

குறிப்புச் சொற்கள்