புதுடெல்லி: டெல்லி தேர்தல் பாஜக முன்னணி பெறத் தொடங்கியதும் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தமது கருத்தைக் கூறினார்.
டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் தோல்வி அடைந்துவருவதாகவும் பாஜக ஆட்சி அமைக்கும் நிலையை எட்டி இருப்பதாகவும் செய்தித் தகவல்கள் கூறி வருகின்றன. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கெஜ்ரிவாலின் அரசியலில் அடியெடுத்து வைப்பதற்கு முன்னால் அவருடைய சக சமூக ஆர்வலரான அன்னா ஹசாரே தமது கருத்தைக் கூறினார்.
“ஒரு வேட்பாளரின் நடத்தை, எண்ணங்கள் தூய்மையானதாக இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் கூறி வந்திருக்கிறேன். வாழ்க்கையானது யாரும் குறைசொல்ல முடியாதபடி இருக்க வேண்டும். தியாகம் இடம்பெற்றிருக்க வேண்டும். இந்தத் தகுதிகள் தான், ஒரு வாக்காளர் நம்மீது நம்பிக்கை வைப்பதற்கு அடிப்படையானவை.
“இதை நான் கெஜ்ரிவாலிடம் கூறி இருக்கிறேன். ஆனால் அவர் அதைக் கேட்கவில்லை. கடைசியில், மதுவில் (மதுபானக் கொள்கை) தான் அவர் கவனம் செலுத்தினார். ஏன் இந்தப் பிரச்சினை எழுகிறது? அவர் பணத்திற்கு அடிமையாகி விட்டார்,” என்று திரு அன்னா ஹசாரே கூறினார்.

