டிடிவி தினகரன் வென்றால் தமிழக அரசியல் மாறும்: அண்ணாமலை

டிடிவி தினகரன் வென்றால் தமிழக அரசியல் மாறும்: அண்ணாமலை

படம்: இந்திய ஊடகம்

13 Apr 2024 - 3:13 pm

1 mins read

தேனி: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிடும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெற்றி பெற்றால் தமிழகத்தின் அரசியல் மாறும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்து அமமுக போட்டியிடுகிறது.

இதனையடுத்து, தினகரனை ஆதரித்து தேனியில் அண்ணாமலை பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது, “தினகரன் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற அவசியமில்லை. கட்சியில் இருந்து வேறு யாராவது ஒருவரை நிறுத்தியிருக்கலாம். அவரே களத்தில் இறங்கியுள்ளார் என்றால், மோடி மீண்டும் ஆட்சியமைக்க வேண்டும், தமிழகத்தில் ஒரு புதிய அரசியலை மக்களுக்குக் காட்ட வேண்டும் என்பதற்காகத்தான்,” என்று அண்ணாமலை கூறினார்.

அத்துடன், ஸ்டாலின், இபிஎஸ் இருவருக்கும் தினகரனைப் பிடிக்காது என்றும் அவர் வெற்றி பெற்றுவிட்டால் தமிழகத்தின் அரசியல் மாறும் என்பது இருவருக்கும் தெரியும் என்றும் அண்ணாமலை சொன்னார்.

ஜூன் 4ஆம் தேதி தினகரன் வெற்றி பெற்ற பிறகு உண்மையான, மக்களைச் சார்ந்த அரசியல் நடக்கும் என்றும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்