ஆக்ரா: உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் தாஜ்மகாலைச் சுற்றிலும் வானூர்தி எதிர்ப்புக் கவசம் (Anti-drone) அமைக்கப்பட்டு உள்ளது.
ஏறத்தாழ ஏழு முதல் எட்டு கிலோ மீட்டர் தொலைவில் வரும் வானூர்திகளைத் துல்லியமாகக் கண்டறியும் திறன் கொண்ட கவசம் அது.
மேலும், தாஜ்மகால் வளாகத்தில் 500 மீட்டர் சுற்றளவில் பறக்கும் எந்த ஒரு வானூர்தியையும் அழித்து ஒழிக்கும் ஆற்றலும் அதனிடம் உள்ளது என்று தாஜ்மகால் பாதுகாப்புக் குழுவின் துணை ஆணையர் சையத் ஆரீப் அஹமது கூறினார்
கவசத்தில் பொருத்தப்பட்டு உள்ள கருவிகள் இரவு பகலாகக் கண்காணிப்பை மேற்கொள்ளும்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலைக் காண தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுப் பயணிகள் வருகின்றனர்.
தாஜ்மகாலுக்கு மத்திய தொழிற்பாதுகாப்புப் படையினரும் உத்தரப் பிரதேச மாநில காவல்துறையினரும் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
அண்மையில் நிகழ்ந்த இந்தியா - பாகிஸ்தான் மோதலின்போது வானூர்தித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
சீக்கியர்களின் புனிதத்தலமான குருத்வாரா உள்ளிட்ட முக்கிய இடங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் வானூர்தித் தாக்குதலை நடத்த முயன்றது.
தொடர்புடைய செய்திகள்
ஆயினும், அவற்றை இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து, முறியடித்தது.