ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தன் முதல் கடையைத் திறக்கவுள்ளது.
கடை மும்பையில் உள்ள ரிலையன்ஸ் ஜியோ கடைத்தொகுதிக்குள் உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
கடை தொடர்பான படங்களை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. கடை இம்மாதத்தில் திறக்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆப்பிள் நிறுவனத்தின் ஆகப்பெரிய தொலைபேசி சந்தைகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. அதில் ஆதிக்கம் செலுத்துவதற்காக 2020ஆம் ஆண்டு அதன் முதல் இணையக் கடையை நிறுவனம் தொடங்கியது.
அதிக விலைக்கு விற்கப்படும் ஆப்பிள் கைப்பேசிகள் இந்தியச் சந்தையில் 3 விழுக்காட்டினரால் மட்டுமே வாங்கப்படுகிறது.
முன்னதாக 2021இல் முதல் கடையைத் திறக்கத் திட்டமிட்ட ஆப்பிள் நிறுவனம் கொவிட்-19 காரணமாக அதைத் தள்ளிவைத்தது.
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் பெரும்பாலான தயாரிப்புகள் இணையம் வழியாக மட்டுமே விற்கப்படுகிறது.


