இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் கடை திறக்கப்பட்டது

1 mins read
0bcc6333-6258-4108-8373-12c879339e70
படம்: ராய்ட்டர்ஸ் -

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் கடை ஏப்ரல் 18 திறக்கப்படுகிறது.

மும்பையில் உள்ள பிகேசி கடைத்தொகுதியில் அந்தக் கடை உள்ளது.

ஆப்பிள் பொருள்களை தொட்டும் உணர்ந்தும் வாடிக்கையாளர்கள் வாங்க கடைகள் நல்ல அனுபவத்தைக் கொடுக்கும் என்று ஆப்பிள் தெரிவித்தது.

நிறுவனத்தின் இரண்டாவது கடை ஏப்ரல் 20ஆம் தேதி புது டெல்லியில் திறக்கப்படுகிறது. கடை ஸ்கேட் கடைத்தொகுதியில் உள்ளது.

புதிதாகத் திறக்கப்படும் கடைகளுக்குள்ளே ஆப்பிள் பொருள்களுக்கு பழுதுபார்க்கும் பிரிவும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மேலும் கடைகளை ஆப்பிள் நிறுவனம் திறக்குமா என்பது குறித்து நிறுவனம் எந்த விவரங்களையும் வெளியிடவில்லை.

குறிப்புச் சொற்கள்