ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் தயாரிப்பு ஆலையைச் சீனாவில் இருந்து இந்தியாவிற்கு இடமாற்ற இருக்கிறது.
கர்நாடக மாநிலத்தில் நிறுவப்படவிருக்கும் அந்தப் புதிய ஆலைக்காக ஆப்பிள் நிறுவனம் 700 மில்லியன் அமெரிக்க டாலரை முதலீடு செய்யவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அந்த ஆலை 300 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ளதை மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அப்புதிய ஆலையால் ஏறக்குறைய 100,000 வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்து இருக்கிறார்.
பெங்களூரு விமான நிலையத்திற்கு அருகே புதிய ஆலையைக் கட்டுவதற்கான திட்டப் பணிகளை ஃபாக்ஸ்கான் நிறுவனம் மேற்கொண்டு வருவதாக புளூம்பெர்க் செய்தி தெரிவிக்கிறது.
ஐபோன் பாகங்கள் அந்த ஆலையில் தயாரிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.