தைவானிய நிறுவனமான ஃபாக்ஸ்கான், ஆப்பிள் நிறுவனத்தின் 'ஏர்போட்' கருவிகளைத் தயாரிக்க அனுமதி பெற்றுள்ளது.
அதன் பொருட்டு, ஃபாக்ஸ்கான் நிறுவனம் இந்தியாவில் புதிய தொழிற்சாலையை திறக்கக்கூடும்.
இந்தியாவில் தொழிற்சாலை அமைக்க ஆப்பிள் சிபாரிசு செய்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவின் தெலுங்கான மாநிலத்தில் S$270 மில்லியன் செலவில் அந்தத் தொழிற்சாலை அமைக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
2024ஆம் ஆண்டு இறுதியில் அந்தத் தொழிற்சாலையில் கருவிகளைத் தயாரிக்க எண்ணம் கொண்டுள்ளது ஃபாக்ஸ்கான்.
ஃபாக்ஸ்கான் கிட்டத்தட்ட 70 விழுக்காடு ஐபோன்களைத் தயாரித்து வருகிறது.
தற்போது அது முதல்முறையாக 'ஏர்போட்' கருவிகளைத் தயாரிக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் அதன் தொழில்நுட்பச் சாதனங்களை சீனாவில் மட்டும் தயாரிக்காமல் மற்ற நாடுகளிலும் தயாரிக்க முடிவு செய்ததைத் தொடர்ந்து இப்போது இந்தியாவில் 'ஏர்போட்' கருவிகள் தயாரிக்கப்படவுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
இருப்பினும், இந்தியாவில் எத்தனை கருவிகள் தயாரிக்கப்படும் என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகவில்லை.


