இந்தியில் பேச வேண்டாம்: மனைவியிடம் அன்பாக கேட்ட ஏ.ஆர்.ரஹ்மான் (காணொளி)

இந்தியில் பேச வேண்டாம்: மனைவியிடம் அன்பாக கேட்ட ஏ.ஆர்.ரஹ்மான் (காணொளி)

1 mins read
f6da8eab-ce33-44a8-810c-0913bf24dd9a
படம்: டுவிட்டர் -

இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் விருது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போது தமது மனைவியை ' இந்தியில் பேச வேண்டாம்' என்று கேட்டுக்கொண்டார்.

அந்தக் காணொளி சமூக ஊடகங்களில் பெரிய அளவில் பரவிவருகிறது.

அண்மையில் ரஹ்மானும் அவரது மனைவி சாய்ராவும் சென்னையில் ஒரு விருது நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

மேடையில் விருதுடன் நிற்கும் சாய்ராவிடம் நிகழ்ச்சியை வழிநடத்துபவர்கள் கேள்விகள் கேட்டனர். அப்போது அருகில் இருந்த ரஹ்மான், சாய்ராவை " இந்தியில் பேச வேண்டாம் தமிழில் பேசுங்க ப்ளீஸ்" என்று கேட்டுக்கொண்டார்.

அது அரங்கில் இருந்த அனைவரையும் சிரிப்பு மழையில் நனையவைத்தது.

தமக்கு தமிழ் அவ்வளவாக வராது என்று கூறிய சாய்ரா, ரஹ்மானின் குரல் தமக்கு மிகவும் பிடித்த குரல் என்றும் அதனால் தான் அவர் பேசுவதை ரசிப்பதாகவும் புன்னகையுடன் பதில் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்