தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாலைவனத்தில் தொல்பொருள்கள் கண்டுபிடிப்பு

1 mins read
19d1469b-7fd2-41ad-ab1f-c74b2bb9bd04
மண்பாண்​டங்​கள், துளையிடப்​பட்ட ஜாடிகள், சுடுமண் பாண்டங்கள், கத்​தி​கள், களிமண், ஓடு​களாலான வளை​யல்​கள் ஆகிய பொருள்களும் கிடைத்துள்ளன. - படம்: ஊடகம்

ஜெய்ப்பூர்: ​ராஜஸ்​தான் மாநிலத்​தின் வறண்ட பாலை​வனத்​தில் சிந்​துச்சமவெளி நாகரி​கம் தொடர்​பான தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.

ராஜஸ்​தானின் ராம்​கர் பகுதியில் இருந்து கிட்​டத்​தட்ட 60 கிலோமீட்டர் தொலை​விலும் பாகிஸ்​தானின் சந்​தன​வாலா​ பகுதியில் இருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலை​விலும் உள்ள வறண்ட பாலை​வனத்தில், ஹரப்பா காலத்​து எச்​சங்​களும் சில தொல்​பொருள்​களும் கண்டெடுக்கப்பட்டன.

இது, ராஜஸ்​தானின் ஆழமான பாலை​வனத்​தி​லும் சிந்துச் சமவெளியைப் போன்ற நாகரிக அடை​யாளம் இருப்​ப​தற்​கான முதல் சான்​றாகும்.

மண்பாண்​டங்​கள், துளையிடப்​பட்ட ஜாடிகள், சுடுமண் பாண்டங்கள், கத்​தி​கள், களிமண், ஓடு​களாலான வளை​யல்​கள் ஆகிய பொருள்களும் கிடைத்துள்ளன.

குறிப்புச் சொற்கள்