தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சாலையில் ஏற்பட்ட வாக்குவாதம் கொலையாக மாறியது

1 mins read
a9276b92-e61c-4290-af65-b15ca67895ce
மகன்மீது அடி விழாமல் இருப்பதற்காக அவரது தாய், பாதுகாப்புக் கவசம் போன்று மகன்மீது படுத்துக்கொண்டு அத்தனை அடிகளையும் வாங்கினார்.  - படம்: சமூக ஊடகம்

மும்பை: இந்தியாவின் நிதித் தலைநகரம் என்று அழைக்கப்படும் மும்பையில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

சாலையில் ஏற்பட்ட வாக்குவாதம் ஒன்று கொலையாக மாறியுள்ளது.

மும்பை நகரின் மலாட் பகுதியில் கடந்த 12ஆம் தேதி ஆகாஷ் மைனே என்ற 28வயது இளையர் தனது பெற்றோருடன் காரில் சென்றுள்ளார்.

டிண்டோஷி பகுதியைக் கடக்கும்போது ஆகாஷ், ஒரு ஆட்டோவை முந்திச் செல்ல முயற்சி செய்துள்ளார். அப்போது கார், ஆட்டோ மீது லேசாக மோதியது.

இதனால் ஆட்டோ ஓட்டுநருக்கும் ஆகாஷுக்கும்  இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆட்டோ ஓட்டுநர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஆகாஷை சரமாரியாகத் தாக்கினார்.

கீழே விழுந்த ஆகாஷின்மீது அடி விழாமல் இருப்பதற்காக அவரது தாய், பாதுகாப்புக் கவசம் போன்று அவர் மீது படுத்துக்கொண்டு அடிகள் அனைத்தையும் வாங்கினார். தன் மகனை அடிக்கவேண்டாம் என ஆகாஷின் தந்தையும் கெஞ்சினார்.

அதைப் பொருட்படுத்தாத அந்த நபர்கள், ஆகாஷை தொடர்ந்து மிதித்தனர். இதில் பலத்த காயமடைந்த ஆகாஷ் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 9 பேரைக் கைது செய்துள்ளனர்.

ஆட்டோ ஓட்டுநர் மற்றும் மேலும் மூவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்