புதுடெல்லி: ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் பரோலில் தப்பிச் சென்றார்.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்தியப்பிரதேச மாநிலம் சிதி கிராமத்தைச் சேர்ந்தவர் அனில் குமார் திவாரி (58). அவர் ராணுவத்தில் ஓட்டுநராகப் பணியாற்றியவர்.
அனில் குமார் 1989ஆம் ஆண்டு தனது மனைவியைக் கொலை செய்தார். அதைத்தொடர்ந்து அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
ஆடவர் கடந்த 2005ஆம் ஆண்டு 2 வாரப் பரோலில் சிறையைவிட்டு வெளிவந்தார். பரோல் முடிந்த பின்னும் ஆடவர் சிறைக்கு வராமல் தலைமறைவானார்.
இந்நிலையில், அனில் குமாரை 20 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது சொந்தக் கிராமத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
“அனில் குமார் கைப்பேசி பயன்படுத்தமாட்டார். வேலை செய்யும் இடம் மற்றும் வசிப்பிடத்தைத் தொடர்ந்து மாற்றி வந்தார். தலைமறைவு காலத்தில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்,” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

