இந்தியாவில் உயரவிருக்கும் பெருங்காயம் விலை

இந்தியாவில் உயரவிருக்கும் பெருங்காயம் விலை

2 mins read
34f7e79c-ef92-41f4-a34b-bb54d506a28c
-

தலிபான்கள் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை கைப்பற்றியுள்ள நிலையில் அந்நாட்டை முழுமையாக, தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதில் இந்தியாவுடனான ஏற்றுமதி, இறக்குமதிக்கு தடை விதித்துள்ளனர்.

ஆப்கானிலிருந்து இந்தியாவுக்கு, பெருங்காயத்துக்கான மூலப்பொருளும், உலர் பழங்களும் இறக்குமதி செய்யப்பட்டு வந்தன.

தற்போது, அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், பெருங்காயம் மற்றும் உலர் பழங்களின் விலை உயர்வதோடு, தட்டுப்பாட்டையும் உருவாக்கும் என, வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

"ஈரான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் போன்ற பல நாடுகளில், பெருங்காய மூலப்பொருட்கள் கிடைத்தாலும், ஆப்கன் மலை பிரதேசங்களில், மானாவரி பயிராக வளரும் பெருங்காயச் செடியில் கிடைக்கும் மூலப்பொருள் தான் தரமானது .அதோடு, மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை விட, ஆப்கானில் இருந்து இறக்குமதி செய்வது தான் இந்தியாவுக்கு எளிதானது; விலை குறைவானது. ஆப்கானில் இருந்து பாகிஸ்தான் வழியாக, சாலை மார்க்கமாக, இந்தியாவுக்கு அது எடுத்து வரப்படும்," என்று தெரிவித்தார் 'ஆச்சி மசாலா' நிறுவன கொள்முதல் மேலாளர் திரு பிலவேந்திரன்.

இந்தியாவை பொறுத்தவரை, ஆண்டுக்கு, 50 லட்சம் கிலோ பெருங்காய மூலப்பொருள் தேவை. ஒரு மாதத்துக்கு முன்னர் வரை, ஒரு கிலோ மூலப்பொருளின் விலை, 8,௦௦௦ ரூபாய்.

தற்போது, தலிபான்கள் தடை விதித்துள்ளதால், நிலைமை சீரடையும் வரை, கட்டாயம் தட்டுப்பாடு ஏற்படும். அதிக விலை கொடுத்தாலும், இறக்குமதி செய்ய முடியாத நிலை நீடிக்கும்.

எதிர்காலத்தில் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருளுக்கு, 30 % வரை வரி விதிக்கப்படலாம் என்றும் அப்போது கிலோ, 8,000 ஆயிரம் ரூபாயாக இருந்த பெருங்காய மூலப்பொருளின் விலை, 13 ஆயிரம் ரூபாயை தாண்டக்கூடும் என்று அவர் எச்சரித்தார்.