பெண் சமூக ஊழியர்கள் போராட்டம்

1 mins read
af19640f-880e-4754-a49d-d0a14f44bffa
பல்லாயிரக்கணக்கான பெண்கள் சுதந்திர பூங்காவில் பார்க்கில் காலவரம்பற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். - படம்: ஏஎஃப்பி

பெங்களூரு: கர்நாடகா மாநில அரசின் அங்கீகாரம் சமூக சுகாதார (ASHA) ஊழியர்கள் கௌரவ ஊதிய உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையறை அற்ற போராட்டத்தில் குதித்து உள்ளனர்.

மாநிலம் முழுவதும் ஏறத்தாழ 25,000 பெண்கள் சமூக சுகாதாரத் துறையில் பணிபுரிகின்றனர்.

தாய்-சேய் பராமரிப்பு, தொழுநோய் மற்றும் காசநோய் கள ஆய்வு, தடுப்பூசி போடுதல் போன்ற பணிகளில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தங்களது பணிக்கான மாதாந்திர கௌரவ ஊதியம் உயர்த்தப்பட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாத ஊதியம் ரூ.15,000 என்று நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை. தற்போது அவர்களுக்கு மாநில அரசு 5,000 ரூபாயும் மத்திய அரசு 2,000 ரூபாயும் வழங்குகின்றன. இது போதாது என்பது அவரகளின் வாதம்.

போராட்டத்தில் குதித்துள்ள பல்லாயிரக்கணக்கான பெண்களுக்கு ஆதரவாக ஏஐடியூசி கம்யூனிசத் தொழிற்சங்கம் ஆதரவு வழங்குகிறது. பெங்களூரு நகரின் சுதந்திர பூங்காவில் (Freedom Park) அவர்கள் போராட்டத்தைத் தொடங்கி உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்