ரூ.472 கோடி மதிப்பிலான போதைப்பொருளை அழித்த அசாம் முதல்வர்

ரூ.472 கோடி மதிப்பிலான போதைப்பொருளை அழித்த அசாம் முதல்வர்

2 mins read
4a1049d8-9a5c-4a81-a433-839d748541c0
அசாமில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் தொடக்க நிகழ்ச்சியில் அசாம் முதல்​வர் ஹிமந்த விஸ்வசர்மா கலந்துகொண்டார். அடுத்த பத்து நாள்களுக்கு போதைப்பொருள் அழிப்புப் பணி தொடரும் என்று கூறப்பட்டது. - படம்: இந்து தமிழ் திசை

கௌஹாத்தி: அசாம் மாநிலத்​தில் கடந்த சில ஆண்​டு​களாகப் போதைப்பொருள் கடத்தலைக் கட்​டுப்​படுத்த, காவல்​துறை தீவிர சோதனை​களை மேற்​கொண்டு வரு​கிறது. இதன் மூலம் பல கோடி ரூபாய் மதிப்​பிலான போதைப்​பொருள்​கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த வழக்​கு​களின் சட்​ட ரீ​தி​யான நடை​முறை​கள் முடிவடைந்​து, நீதி​மன்​றத்​தின் முறை​யான அனு​மதி பெற்​றதைத் தொடர்ந்​து, அந்த போதைப்பொருள்களை அதி​கார​பூர்​வ​மாக அழிப்​ப​தற்​காக மாநில அளவிலான சிறப்புத் தொடக்க நிகழ்ச்​சிக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) ஏற்​பாடு செய்​யப்​பட்​டது.

கௌஹாத்தி புறநகர்ப் பகு​தி​யில் நடை​பெற்ற போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்​சி​யில், அசாம் முதல்​வர் ஹிமந்த விஸ்வசர்​மா, அமைச்​சர்​கள் ஜெயந்த மல்லா பரு​வா, நாராயண் தேகா ஆகியோருடன் காவல்துறை உயரதி​காரி​கள் பலரும் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்​சி​யின்போது, பறி​முதல் செய்​யப்​பட்ட போதைப்​பொருள் மூட்​டைகளின்மீது முதல்​வர் ஹிமந்த விஸ்வ சர்​மாவே நேரடி​யாக ‘ரோடு ரோலர்’ இயந்​திரத்தை ஓட்டி அவற்​றை அழிக்கும் பணியைத் தொடங்கி வைத்தார். அடுத்த பத்து நாள்களுக்கு போதைப்பொருள் அழிப்புப் பணி தொடரும் என்று கூறப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், அசாமை போதைப்பொருள் அறவே இல்லாத மாநிலமாக வைத்திருக்கும் பொருட்டு மாநில அரசாங்கம் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று சூளுரைத்தார்.

இந்தச் சம்பவம் தொடர்​பான காணொளியை அவர் தமது சமூக ஊடகப் பக்கத்தி​ல் பகிர்ந்​துள்​ளார்.

மத்​திய அரசு வழங்​கிய அதிவெப்ப எரி உலை மூலம், சுற்​றுச்​சூழலுக்குப் பாதிப்பு இல்​லாத வகையில் அறி​வியல்பூர்வமான முறை​யில் போதைப்பொருள் அழிப்​புப் பணி மேற்கொள்​ளப்​பட்​டது. அழிக்கப்பட்ட போதைப்பொருள்களின் மதிப்பு மொத்தம் 472.51 போடி ரூபாய் என்று கணிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்