அசாம்: பெற்றோருடன் நேரம் செலவிட சிறப்பு விடுமுறை

1 mins read
09af001c-5469-4a6c-baa7-535901aeafd3
வருகிற நவம்பர் 14, 15 ஆகிய தேதிகளில் அரசு ஊழியர்கள் பெற்றோருடன் இருப்பதற்கான விடுப்பைப் பெற அம்மாநில அரசு அனுமதிக்கிறது. - படம்: ஊடகம்

கவுகாத்தி: அசாமில் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையில் பாரதிய ஜனதா ஆட்சி நடந்து வருகிறது.

2021ஆம் ஆண்டு பதவியேற்றதும் தனது முதல் சுதந்திர தின உரையில் பெற்றோருடன் அரசு ஊழியர்கள் நேரம் செலவிட சிறப்பு விடுமுறை வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்திருந்தார்.

அது அம்மாநிலத்தில் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.

அதன்படி, வருகிற நவம்பர் 14, 15 ஆகிய தேதிகளில் அரசு ஊழியர்கள் பெற்றோருடன் இருப்பதற்கான விடுப்பைப் பெற அம்மாநில அரசு அனுமதிக்கிறது.

இந்த விடுமுறையை அதற்கான வழிகாட்டலின் அனுமதியுடன் விண்ணப்பித்துப் பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவில் அம்மாநில ஆளுநரும் கையெழுத்திட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்