பெங்களூரு: இந்தியாவின் பெங்களூரு நகரில் உள்ள கெம்பகௌடா அனைத்துலக விமான நிலையத்தில் இரண்டு டாக்சி ஓட்டுநர்களைக் கத்தியால் தாக்க முயன்ற ஆடவர் கைது செய்யப்பட்டார்.
இச்சம்பவம் இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 17) இரவு நிகழ்ந்தது.
இத்தகவலைப் பெங்களூரு காவல்துறை திங்கட்கிழமை (நவம்பர் 18) வெளியிட்டது.
தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் ஆடவரின் பெயர் சொஹேல் அகமது,
அவரை விமான நிலையத்துக்கு வெளியே அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர்.
ஆயுதங்கள் சட்டத்தின்கீழ் அவர் கைது செய்யப்பட்டு விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அந்த ஆடவர் தாக்குதல் முயற்சியில் ஈடுபடுவதையும் அதிகாரிகள் அவரை மடக்கிப் பிடித்ததையும் காட்டும் காணொளி எக்ஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

