ஹோர்முஸ் நீரிணையில் தாக்குதல்: இரு இந்திய மாலுமிகள் காயம்

ஹோர்முஸ் நீரிணையில் தாக்குதல்: இரு இந்திய மாலுமிகள் காயம்

படம்: ராய்ட்டர்ஸ்

18 Nov 2026 - 4:16 pm

2 mins read

புதுடெல்லி: ஹோர்முஸ் நீரிணையில் 24 இந்திய மாலுமிகளு​டன் சென்ற எல்பிஜி கப்பல் மீது நடத்​தப்​பட்ட ஏவு​கணைத் தாக்​குதலில் இரண்டு மாலுமிகள் காயமடைந்​தனர். மேலும், ஒரு மாலுமியைக் காணவில்லை.

“திங்கட்கிழமை (நவம்பர் 16) ஹோர்முஸ் நீரிணையில் பனாமா நாட்​டுக் கொடி​யுடன் பயணித்த ‘எம்டிதாரா கேஸ்’ என்ற எல்​பிஜி கப்​பல் மீது ஏவு​கணை தாக்​குதல் நடத்​தப்​பட்​டது. இதில், இரு இந்​திய மாலுமிகள் காயமடைந்​தனர். அவர்​கள் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளனர்,” என்று மத்​திய வெளி​யுறவு அமைச்​சு வெளி​யிட்ட செய்திக் குறிப்​பில் தெரிவிக்கப்பட்டது.

“கப்​பலில் இருந்த 21 மாலுமிகள் பத்​திர​மாக மீட்​கப்​பட்டு கசாப் கடற்​கரைப் பகுதிக்குக் கொண்டு செல்​லப்​பட்​டுள்​ளனர். மேலும், ஒரு இந்​திய மாலுமியைக் காணவில்லை,” என்று அதிகாரிகள் கூறினர்.

ஓமானில் உள்ள இந்தியத் தூதரகம், அந்​நாட்டு அதி​காரி​களு​டன் இணைந்து மாயமான மாலுமியைத் தேடும் மீட்​புப் பணி​களை தொடர்ந்து கண்காணித்து வரு​கிறது.

மீட்​புப் பணி​களில் உரிய நேரத்​தில் உதவி​களை​யும், ஆதர​வை​யும் வழங்​கிய ஓமான் அரசுக்கு இந்தியா நன்றி தெரி​வித்​தது.

“மத்திய கிழக்கு வட்டாரத்தில் கப்​பல்​கள் தொடர்ந்து தாக்​கப்​படு​வது கவலை அளிக்​கிறது. இது அனைத்துலக கடல் வழிகளில் பயணம் செய்யும் பொது​மக்​கள், மாலுமிகளின் பாது​காப்​புக்கு மிகப்​பெரிய அச்​சுறுத்​தலாக உள்​ளது,” என்று மத்​திய வெளி​யுறவு அமைச்​சு குறிப்பிட்டது.

“வணி​கக் கப்​பல்​கள் மற்​றும் பொது உள்​கட்​டமைப்​பு​கள் மீதான தாக்​குதல்​கள் உடனடி​யாக நிறுத்​தப்பட வேண்​டும். அனைத்துலகச் சட்​டங்​களுக்கு இணங்க, அனைத்துலகக் கடல் வழிகளில் தடையற்ற கப்​பல் போக்​கு​வரத்​தும் வர்த்​தக​மும் விரை​வில் மீட்​டெடுக்​கப்பட வேண்​டும்,” என்று அமைச்சு அறிக்கையில் சுட்டிக்காட்டியது.

குறிப்புச் சொற்கள்